அதிர்ச்சி..! காங்கிரஸ் பெண் MLA-வை கட்டிப்பிடிக்க பாய்ந்த மூத்த நிர்வாகி… கட்சித் தலைமையகத்திலேயே இப்படியா..? வலுக்கும் கண்டனம்..!!

Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அரங்கேறிய ஒரு விரும்பத்தகாத நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொல்லம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பிந்து கிருஷ்ணா கூட்டத்திற்கு வருகை தந்தபோது, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த மூத்த காங்கிரஸ் நிர்வாகி செரியன் பிலிப், கைகுலுக்குவதற்குப் பதிலாக அவரை அணைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. எதிர்பாராத இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த பிந்து கிருஷ்ணா, உடனடியாக சுதாரித்துக் கொண்டு அவரைத் தடுத்து நிறுத்தியதுடன், அங்கிருந்த மற்ற நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் பெண் பிரதிநிதியிடம், பொது இடத்தில் மூத்த நிர்வாகி ஒருவர் இத்தகைய அநாகரீகமான முறையில் நடந்துகொண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கட்சித் தலைமையகத்திலேயே ஒரு பெண் எம்.எல்.ஏ-வுக்குப் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் கேள்விக்குறியாகியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் கேரள காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சங்கடத்தை உருவாக்கியுள்ளது.

Soundarya

Recent Posts

“நடைபாதையில் தூங்கிய பிஞ்சு உயிர்.. கொடூரமாக சீரழித்து வீசி சென்ற டாக்சி டிரைவர்”… 100 சிசிடிவி கேமராக்கள்.. 4 மணி நேர வேட்டை… டெல்லியை உலுக்கிய கொடூர சம்பவம்..!

டெல்லியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்…

6 minutes ago

உதயநிதிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பேஸ் முடிந்தது… பொறுமையா இருந்தது இதுக்குதான்…. அம்பலப்படுத்திய நடிகர் ஷாம்…!

தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக "முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "அவருக்குப் பேசத் தெரியவில்லையா?" என்று எழுந்த…

17 minutes ago

திமுகவிலிருந்து விலகுகிறாரா செந்தில் பாலாஜி?… அதிமுக, பாஜகவுக்கு கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்மென்ட்.. சட்டசபையில் நடந்த அதிரடி திருப்பம்…!

அண்மைக் காலமாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தங்கள் வசம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் தீவிரமாக…

26 minutes ago

“நாங்க மட்டும் இல்லன்னா அன்னைக்கு பதவியேற்பே நடந்திருக்காது”.. விஜய்க்கு கம்யூனிஸ்ட் கொடுத்த அதிரடி ஷாக்… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!

தமிழக அரசியல் களம் தற்போது 'தவெக'ஆட்சி நீடிப்பது யாரால்?' என்ற காரசாரமான விவாதத்தால் சூடேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…

33 minutes ago

“எமர்ஜென்சிக்கே அஞ்சாத நாங்க இதுக்கா பயப்படப் போறோம்?”… தவெக-வை வறுத்தெடுத்த அமைச்சர் சேகர்பாபு….!

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது…

39 minutes ago

“திமுக, அதிமுகவுக்கு வன்னி அரசு கொடுத்த மரண மாஸ் பதிலடி”…. நேரில் அழைத்து விஜய் செய்த காரியம்…. அதிர்ந்துபோன அரசியல் களம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…

45 minutes ago