தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி நீடித்து வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் திணறி வருகிறது. இந்தச் சூழலில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது எம்எல்ஏக்களுக்குப் பிறப்பித்துள்ள உத்தரவு, தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் எதிர்பாராத மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனாலும் கட்சியின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்கப் போகிறேன். அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மேலும், வரும் 10-ஆம் தேதி வரை திமுக எம்எல்ஏக்கள் யாரும் சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என்றும், இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே அதிமுக தனது எம்எல்ஏக்களைப் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைத்து ரகசிய ஆலோசனைகளை நடத்தி வரும் நிலையில், ஸ்டாலினின் இந்தப் பேச்சு திமுக மற்றும் அதிமுக கைகோர்க்க வாய்ப்புள்ளதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மெஜாரிட்டியை நிரூபிக்கத் தவறினால், பரம எதிரிகளாகக் கருதப்படும் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரு “மகா கூட்டணி” ஆட்சியை அமைக்கக்கூடும் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்த இரு கட்சிகளின் மொத்த பலம் 121 ஆக இருப்பதால், மெஜாரிட்டிக்குத் தேவையான 118-ஐ விட இது கூடுதல் பலமாகும்.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் அது ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக அமையும். தவெக-வை ஆட்சி பீடத்தில் ஏறவிடாமல் தடுக்கவும், நிலையான ஆட்சியை வழங்கவும் இத்தகைய ஒரு வியூகம் வகுக்கப்படுகிறதா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஸ்டாலின் எடுக்கப்போகும் அந்த “முக்கிய முடிவு” என்ன என்பது வரும் 10-ஆம் தேதிக்குள் தெரிந்துவிடும் என்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் சென்னை அறிவாலயத்தை நோக்கியே காத்திருக்கிறது.
மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…
பிரேசில் நாட்டின் சாண்டா கதரீனா மாகாணத்தில் உள்ள பிரையா கிராண்டே பகுதியில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஹாட் ஏர் பலூன்…
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பிற கட்சி அமைச்சர்களை, திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஆ. ராசா…
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தாய்மாமன் தங்க மோதிரம்…