இரவோடு இரவாக இணைந்தார்…. சசிகலாவின் ‘ரைட் ஹேண்ட்’ மாஸ் என்ட்ரி…. தவெகவில் இணைந்த முன்னணி வழக்கறிஞர்… ஆடிப்போன அதிமுக….!

By Nanthini on ஆடி 23, 2026

Spread the love

சசிகலாவின் நம்பிக்கைக்குரிய வழக்கறிஞராகவும், அவரது சொத்துக் குவிப்பு வழக்கு, அதிமுக தொடர்பான சிவில் விவகாரங்கள் மற்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு நியாயங்களை மிக வலுவாக எடுத்துரைத்து சட்டப் போராட்டம் நடத்தியவருமான பிரபல வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அமமுகவின் முதன்மை வழக்கறிஞராகவும் பணியாற்றிய இவர், தவெகவின் முக்கிய நிர்வாகியான சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்னிலையில் முறைப்படி கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.