“ஐயோ… மாத்திரை போட்டும் தலைவலி கேட்கலை…? ஒற்றைத் தலைவலிக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய மேஜிக் சிகிச்சை…! இதோ உங்களுக்காக நவீன தீர்வுகள்…!!”

By Swetha on ஆடி 23, 2026

Spread the love

ஒற்றைத்தலைவலி என்பது சாதாரண தலைவலி அல்ல; இது மூளையின் நரம்பு மண்டலம் சார்ந்த ஒரு முதன்மைத் தலைவலி கோளாறாகும். உடலின் வேறு நோய்களால் வராமல், நரம்பு மண்டலத்தின் நேரடிச் செயல்பாட்டால் வரும் இது, ஒரு பக்கமாகத் துடிக்கும் வலி, வெளிச்சம் சத்தத்தைப் பார்க்க முடியாத நிலை மற்றும் வாந்தி உணர்வுடன் வெளிப்படுகிறது. இது திடீரென வராமல் முன்னறிகுறி நிலை , ஆரா நிலை , தலைவலி நிலை மற்றும் வலிக்குப் பிந்தைய நிலை என நான்கு படிநிலைகளாக வெளிப்படுகிறது.

நமது தலையின் மிகப்பெரிய உணர்ச்சி நரம்பான டிரைஜெமினல் நரம்பு தூண்டப்படும்போது, மூளையில் CGRP எனும் வேதிப்பொருள் அதிகளவில் சுரக்கிறது. இந்த CGRP வேதிப்பொருளே வலி நரம்புகளைச் சுறுசுறுப்பாக்கித் தாங்க முடியாத ஒற்றைத்தலைவலியை உருவாக்குகிறது. பரிணாம வளர்ச்சியில் ஆதிமனிதனுக்கு ஆபத்தை உணர்த்திய எச்சரிக்கை மணி, இன்று நோயாக மாறியுள்ளது. ஆண்களை விடப் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இது இரண்டு மடங்கு அதிகம் ஏற்படுகிறது. இது வெறும் மனஅழுத்தத்தால் மட்டுமே வருகிறது என நீண்டகாலமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டாலும், உலக சுகாதார நிறுவனம் இதனை மனித வாழ்க்கையை முடக்கும் முதல் 10 நோய்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.

   

முன்பெல்லாம் இரத்த நாளங்களைச் சுருக்கும் சாதாரண வலி நிவாரணிகளே வழங்கப்பட்ட நிலையில், நவீன மருத்துவம் இதில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. CGRP வேதிப்பொருள் நரம்புகளில் இணைவதைத் தடுக்கும் ஜிபான்ட்ஸ் மாத்திரைகள் மற்றும் CGRP செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி தலைவலி வருவதையே தடுக்கும் மாதமொருமுறை செலுத்தப்படும் CGRP மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் ஊசி மருந்துகள் தற்போது கிடைக்கின்றன. தூக்கமின்மை, நீரிழப்பு மற்றும் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதன் மூலமும் முறையான மருத்துவ ஆலோசனைகள் பெறுவதன் மூலமும் ஒற்றைத்தலைவலியில் இருந்து முழுமையான நிவாரணம் பெற முடியும்.