எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இரண்டு பேரும் அவ்வப்போது அது சம்பந்தமாக கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். இது அதிமுகவில் சலசலப்பு ஏற்படுத்தி வந்த நிலையில் அதிமுக ஒன்றிணைய எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார். இதனால் செங்கோட்டையன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி உத்தரவிட்டார்.
இது தொடர்பாக செங்கோட்டையன் கோர்ட்டில் வழக்கு தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நடிகர் விஜயின் TVK கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் நேற்று தகவல் வெளியானது .அதாவது 27ஆம் தேதி நடிகர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக வெளியானது. இது உண்மையா? அல்லது வதந்தியா? என்பது தெரியவில்லை. எனினும் இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
