அடுத்த அதிரடி…!! தவெக-வில் இணைய போகும் அதிமுக தலைவர்கள் யார்…? செங்கோட்டையனின் பதில்…!!

By Devi Ramu on கார்த்திகை 28, 2025

Spread the love

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் முழு ஆதரவுடன் நடிகர் விஜய் ஆட்சி அரியணையில்  அமர்வார் என்று நம்பிக்கை தெரிவித்தார். புதியவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும், அந்தக் ஆட்சி  மாற்றத்தை உருவாக்குவதற்குத் தான் விஜய்க்கு முழுமையாக உதவுவேன் என்றும் அவர் கூறினார்.

அதிமுகவில் இருந்து வேறு சிலரும் தவெக-வில் இணைவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, அதுபற்றி இப்போதைக்குத் தெரிவித்தால் பிரச்சினை வரும் என்பதால், இப்போது சொல்ல முடியாது என்று பதிலளித்தார். இருப்பினும், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி, விஜய் தலைமையில் தமிழகம் வெற்றிநடை போடுவதற்கு அயராது உழைப்பதாக அவர் உறுதி அளித்தார்.