திடீர் திருப்பம்…. MLA பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டையன்?… அடுத்த பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவர் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்திருந்த நிலையில் மொத்தமாக அவரை கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்பது குறித்து பல தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி விஜய் முன்னணியில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளதாகவும் அதற்கு முன்பாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்றும் அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இபிஎஸ்-க்கு கெடு விதித்துள்ள ஓபிஎஸ் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைவது குறித்து டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கலாம் என கூறப்படுகிறது.