பாமகவில் அடுத்த பரபரப்பு..! சற்றுமுன் வேட்பாளர்கள் லிஸ்டை அறிவித்த ராமதாஸ்…!!!

By Soundarya on கார்த்திகை 25, 2025

Spread the love
பாமகவில் இன்னும் பனிப்போர் நீடித்து வருகிறது. இன்னும் சண்டை ஓய்ந்த பாடில்லை. பாமக  பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்ததற்கு  அன்புமணி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். இதுவே தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான மோதல் வெளிப்படையாக தெரிய காரணமாக அமைந்தது. அதன்பின்பு பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன.
குறிப்பாக, பாமகவின் அதிகார போட்டி, கட்சியில் குடும்ப உறுப்பினர்களை நியமிப்பது போன்ற விவகாரங்கள் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தின. இரு அணிகளாக பிரிந்து கிடக்கும் ராமதாஸ், அன்புமணியை இணைக்க NDA தரப்பினர் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில்,  தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்குமரன், MLA அருள் ஆகியோர் நிச்சயம் போட்டியிடுவார்கள் என அறிவித்துள்ளார்.