அடச்சீ..! விலங்குகளுக்கே பாதுகாப்பு இல்லையே… பசுமாட்டிற்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Soundarya on கார்த்திகை 25, 2025

Spread the love

சமீபகாலமாகவே பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண் பிள்ளைகளை வெளியே அனுப்பவே பெற்றோர்கள் பயப்படும் சூழல் உருவாக்கி விட்டது. இப்படி ஒருபுறமிருக்க மறுபுறம் சென்னை பல்லாவரம் அருகே நள்ளிரவில் பசுமாடு  ஒன்றை நபர் ஒருவர் கஞ்சா போதையில் பாலியல் துன்புறுத்தல் செய்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விலங்குகள் நல சமூக ஆர்வலர்கள் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இதை பார்த்து இணையவாசிகளோ விலங்குகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மக்கள் நிலை என்னநிலை? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிதைந்து விட்டது . விலங்குகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது என்று புலம்பி வருகிறார்கள்.