தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல சிக்கல்கள் இருந்தது. பொதுச் செயலாளர் பதவிக்கு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கடும் மோதல் நிலவிய நிலையில் இறுதியாக ஓபிஎஸ் ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதே சமயம் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா என அனைவருமே ஒவ்வொரு பக்கம் விலகி இருக்க மீண்டும் அதிமுக ஒன்று பட வேண்டும் என்பதே பலருடைய எண்ணமாக உள்ளது. ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் இபிஎஸ் தன்னந்தனி ஆளாக நின்று பாஜகவுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை தனியாக நின்று எதிர்கொள்ள இபிஎஸ் தயாராகி வருகின்றார். சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க அதிமுக ஒருங்கிணைப்புக்கான குரல் வலுத்துக் கொண்டே வருகின்றது.
இந்நிலையில் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மீண்டும் அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. ஏற்கனவே இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்து அவரை தங்கமணி மற்றும் வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தனர். தற்போது அவர் தனது முடிவுக்கு குறித்து செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் பேச இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இபிஎஸ்-க்கு புதிய தலைவலியாக அமைந்துள்ளது.
