அதன்படி கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விடுபட்ட குடும்ப தலைவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான குடும்ப தலைவிகள் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் விரைவில் மகளிர் உரிமைத் தொகை குறித்து அறிவிப்பை வெளியாகும் என தெரிகிறது.
இந்நிலையில் மகளின் உரிமை தொகை திட்டத்தின் kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் அரசு புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. அதாவது விண்ணப்பங்களை நிலையை அறியும் பகுதியில் அதிகாரிகள் உள் நுழைவு மற்றும் பொதுமக்கள் உள் நுழைவு என இரண்டு ஆப்ஷன்கள் இருந்தது. தற்போது அதிகாரிகள் மட்டுமே விண்ணப்ப நிலையை அறியும்படி மாற்றப்பட்டுள்ளது. விரைவில் திட்டத்தில் புதிதாக இணைபவர்களின் பட்டியலை அரசு வெளியிட இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
