பொதுவாக காய்கறி, பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமாக இருந்தாலும், சில பழங்கள் நோயாளர்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கிறது. அந்த வகையில் ஆரோக்கியம் நிறைந்த மாதுளை பழத்தை குறிப்பிட்ட சில பேர் சாப்பிட்டால், அவர்களின் உடலில் உள்ள நோயை அதிகரிக்கும்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
- உடலில் ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள், மாதுளை பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் ரத்த நாளங்களை தளர வைத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். எனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மேலும் மாதுளை பழத்தை சாப்பிட்டால் தலைசுற்றல், பார்வை மங்குதல், மயக்கம் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மாதுளை பழம் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லது என்றாலும், ரத்த அழுத்தம் உள்ளிட்டவர்களுக்கு தீமையை விளைவிக்கும்.
- ACE தடுப்பான்கள், ஸ்டேடின்கள், பீட்டா-தடுப்பான்கள் மற்றும் ஆன்டிகோகுலண்டுகள் போன்ற மருந்துகளை உட்கொள்பவர்கள் மாதுளம்பழம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள சேர்மங்கள் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு குடிக்கும் மருந்துகளில் வீரியத்தை குறைத்து விடும்.
- மாதுளை சாற்றை குடிக்கும் பொழுது, CYP3A4 மற்றும் CYP2C9 போன்ற முக்கிய கல்லீரல் நொதிகள் தடுக்கப்படுகின்றது. சில சமயங்களில் இது இதய நோயாளிகள் அல்லது நீண்ட காலம் மருந்து எடுத்து கொள்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.
- அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், மாதுளை பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு 2 வாரங்களுக்கு முன்பிருந்தே மாதுளை பழத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிகிச்சையின் போது அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
