சியா விதை நீர் Vs ஓமம் நீர்….! உடல் எடையை குறைக்க எது சிறந்ததுன்னு தெரியுமா….? உங்களுக்கான சூப்பர் தகவல்….!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2025

Spread the love

உடல் எடை குறைக்க விரும்புவர்கள் ஓமம் நீர், சியா விதை நீர் ஆகியவற்றை பருகுவார்கள். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற காலை நேரத்தில் டீடாக்ஸ் நீரை குடிப்பார்கள். அந்த வகையில் சியா விதை நீர் ஓமம் நீர் இரண்டில் எடை இழப்புக்கு முக்கிய பங்கு வகிப்பது எது என்பது தெரியுமா? பண்டைய கால முதல் இன்று வரை ஆயுர்வேத வைத்தியங்களிலும் ஓமம் முக்கிய பங்காற்றுகிறது.

இரவு முழுவதும் ஓமத்தை தண்ணீரில் ஊற வைத்து காலையில் குடித்தால் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். செரிமானம் மேம்படும். பசியின்மை கட்டுப்பாட்டை இயற்கையாகவே அதிகரிக்கும் வீக்கம் மற்றும் உடலில் நீர் தங்குதல் குறைக்கப்படும். ஓமத்தில் இருக்கும் தைமால் என்னும் சேர்மம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொழுப்பை எரிக்கும் திறனை அதிகரிப்பதால் அது இயற்கையான கொழுப்பு நீக்கி என அழைக்கப்படுகிறது.

   

இதே போல சியா விதைகள் தண்ணீரில் ஊற வைத்தால் ஜெல்லி போன்ற அமைப்புக்கு மாறும். இது அதிகப்படியான பசியை கட்டுப்படுத்தும். நார்ச்சத்து, ப்ரோட்டின் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கும். இதனால் வயிறு நீண்ட நேரம் முழுமையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

   

ஓமம் நீரை பொறுத்தவரை குடல் பிரச்சனைகள், செரிமான சிக்கல்கள் தீரும். சியா விதை நீரை பொறுத்தவரை பசியை கட்டுப்படுத்தும் கலோரி உட்கொள்ளலை குறைக்க விரும்புவோருக்கு ஏற்றது. எனவே ஒருவரது முன்னுரிமை எது என்பதை பொறுத்து அவர்களது தேர்வு இருக்கும். இவை இரண்டையுமே மாற்றி மாற்றி உட்கொள்வது கூட சிறந்த நடைமுறைதான். இது இயற்கையாகவே எடை இழப்புக்கு உதவி செய்கிறது.