உத்திரபிரதேசம் மாநிலத்தின் கிசான் டிகிரி கல்லூரி வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் கூட்டமாக மழையில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் சட்டை அணியாமல் கொட்டி தீர்த்த கனமழையை ரசித்துக்கொண்டிருந்த தருணத்தில் திடீரென்று அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது மின்னல் தாக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த மாணவர்களும் காயமடையவில்லை.
மின்னல் தாக்கிய உடனே மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து பயத்துடன் ஓடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த இடத்தில் கடுமையான புகை நாற்றம் வீசியதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஒருவேளை மாணவர்கள் மரத்திற்கு அருகில் நின்றிருந்தால் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
➡️ बस्ती
➡️ किसान डिग्री कॉलेज में गिरी आकाशीय बिजली
➡️ बारिश में खेल रहे बच्चे बाल-बाल बचे
➡️ घटना का लाइव वीडियो कैमरे में कैद
➡️ कोतवाली थाना क्षेत्र का मामला#Basti #LightningStrike #StudentSafety #BreakingNews #LiveVideo pic.twitter.com/IcBKXG2lcy— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) August 31, 2025
