திடீர் திருப்பம்…! நான் ஓபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை… செங்கோட்டையன் மறுப்பு..!!

By Soundarya on புரட்டாதி 26, 2025

Spread the love

அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன. அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசி இருந்தார். அதேசமயம் செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில்  ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. டிடிவி மற்றும் ஓபிஎஸ்-ஐ சந்தித்ததாக வதந்திகள் பரப்பப்படுகிறது, இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.