BREAKING: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100% வரி.. மீண்டும் அடிமடியில் கைவைத்த டிரம்ப்..!!

By Soundarya on புரட்டாதி 26, 2025

Spread the love

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மருந்துகளுக்கும் 100% வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் உற்பத்தி ஆலை இல்லாத அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார் .

இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 32 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகளை அமெரிக்காவுக்கு இந்திய அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த நடவடிக்கை இந்திய மருந்துத் துறையை கடுமையாகப் பாதிக்கலாம், ஏனெனில் அது வெளிநாடுகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடனான வர்த்தகத்தை கணிசமாகச் சார்ந்துள்ளது.