” என்னை TVK-வுக்கு அழைத்தார்” கூட்டணிக்கு தூது விட்ட செங்கோட்டையன்… போட்டுடைத்த முக்கிய புள்ளி…!!

Spread the love

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக-வில் இணைந்த பிறகு, கட்சியின் முக்கியப் பொறுப்பாளராகச் செயல்பட்டு வரும் அவர், பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை தவெக-வை நோக்கி இழுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்தச் சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையும் தவெக கூட்டணிக்கு வருமாறு செங்கோட்டையன் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள டிடிவி தினகரன், செங்கோட்டையன் தன்னைத் தவெக கூட்டணிக்கு அழைத்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர், செங்கோட்டையன் தன்னிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாகி வரும் நிலையில், செங்கோட்டையனின் இந்தத் தூது முயற்சி மற்றும் டிடிவி தினகரனின் பதில் ஆகியவை அரசியல் அரங்கில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.
Soundarya

Recent Posts

திக் திக் நிமிடங்கள்…! வேகமாக வந்த எக்பிரஸ்… தண்டவாளத்தில் சரிந்த மண், மின்கம்பம்… சிக்னல் காட்டி ரயிலை நிறுத்திய ஊழியர்கள்… பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி - ஹவுரா ரயில் வழித்தடத்தில் கட்டுமானப் பணிகளின் போது திடீரென மண்…

11 minutes ago

மகளிர் உரிமை தொகை…! அரசின் இரட்டிப்பு சர்ப்ரைஸ்…! இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் கோடிக்கணக்கான இல்லத்தரசிகளுக்கு அரசு தரப்பில் இரட்டிப்பு…

18 minutes ago

50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து… தலைக்குப்புற கவிழ்ந்து 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

44 minutes ago

பொம்மையை தாயாக நினைத்து வளர்ந்த குரங்கு… இன்று மற்ற குட்டிகளுக்கு பாதுகாவலனாக மாறிய அதிசயம்… கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…

50 minutes ago

“அந்த மனசு தான் சார் கடவுள்…” குழந்தை இழுத்ததில் அறுந்து விழுந்த 1.5 பவுன் தங்க செயின்…! சுதாரித்து எடுத்த தூய்மை பணியாளர்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கீழே கிடந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான…

1 மணத்தியாலம் ago

கார் கண்ணாடியை துளைத்த தோட்டாக்கள்…! நூலிழையில் உயிர் தப்பிய தந்தை மற்றும் 1 வயது மகள்… 3 கி.மீ துரத்தி சென்ற கும்பல்… பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…

1 மணத்தியாலம் ago