விஜய் மேடையில் இல்லாத செங்கோட்டையன்…. கொங்கு மண்டலத்தில் நடப்பது என்ன…? பரபரப்பு பின்னணி…!!

By Devi Ramu on சித்திரை 17, 2026

Spread the love

அதிமுகவிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் தவெகவில் தனக்கு உரிய மரியாதை இல்லை எனக் கருதுவதாகவும், அவர் விரைவில் விலக வாய்ப்புள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கிளப்பிய தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது. விஜய்யுடன் மற்ற முக்கிய நிர்வாகிகள் மேடையில் இருந்தபோது, செங்கோட்டையன் மட்டும் வராதது இந்த வதந்திகளுக்கு வலு சேர்ப்பது போல் அமைந்தது.

ஆனால், இந்த வதந்திகளை முற்றிலுமாக மறுத்துள்ள செங்கோட்டையன் தரப்பு, அவர் கொங்கு மண்டலத்தில் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருப்பதால் விழாவிற்கு வர முடியவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. நேற்று ஈரோட்டில் தவெக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்த அவர், விஜய் நிச்சயம் முதல்வர் ஆவார் என்றும், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் ஆவேசமாகப் பேசினார். இதன் மூலம் கட்சி மாறப்போவதாக எழுந்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அவர், களப்பணியே தனது முதன்மை நோக்கம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.