ஓட்டல்கள் க்ளோஸ்…? ரூ.7,000-க்கு கேஸ் விற்கும் ஏஜெண்டுகள்…. பொதுமக்களுக்கு அடுத்த இடி…!!

By Devi Ramu on சித்திரை 17, 2026

Spread the love

தமிழகத்தில் வணிக எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக, வெளிச்சந்தையில் ஒரு சிலிண்டர் கள்ளச்சந்தையில் ₹7,000 வரை விற்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்கள் தங்களது விநியோக சேவையை நிறுத்தியதால் அரசு நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு, தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் உணவகங்கள் மற்றும் சிறு தொழிற்சாலைகளைத் தொடர்ந்து இயக்க முடியாமல் உரிமையாளர்கள் தவித்து வருவதுடன், பல கடைகளை மூடும் சூழலும் உருவாகியுள்ளது.

இந்த எரிவாயு தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் பரோட்டா, தோசை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை ₹20 வரை உயர்ந்துள்ளது சாதாரண மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமிஷன் ஏஜெண்டுகளின் அத்துமீறலைத் தடுக்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தாலும், சீரான விநியோகமே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். நிலைமை சீரடையாவிட்டால் குறுந்தொழில்கள் முற்றிலுமாக முடங்கிவிடும் அபாயம் உள்ளதாகத் தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.