ரசிகர்களின் பலநாள் கேள்விக்கு விடை கொடுத்த செல்வராகவன்.! ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்கப்போவது இவர்களா.?

By Ranjith Kumar

Published on:

சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன், இவரின் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, தன்னுடைய இயக்கத்தில் மிக சிறந்த திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார், அந்தவகையில் இவர் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.

தற்பொழுது செல்வராகவனிடம் ரசிகர்கள் விரும்பி கேட்பது புதுப்பேட்டை இரண்டாம் பாகம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது என்று தான், சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலை சென்று கொண்டிருக்கிறது எனவும், அதற்காக ஸ்கிரிப்ட் ஒர்க் போய்க்கொண்டிருக்கிறது என்றும் தனது ட்விட்டரில் பதிலளித்திருந்தார். செல்வராகவனின் கரியரில் ஒரு மிக முக்கியமான படமானது ஆயிரத்தில் ஒருவன், அப்படம் இப்ப வரை பேசப்பட்டு தான் வருகிறது, அப்படத்திருக்கான பாகம் 2 எப்பொழுது வரும் என்று கண்ணில் எண்ணெய் ஊற்றி காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

   

தற்போது செல்வராகவன் தரப்பிலிருந்து சில தகவல்கள் கசிந்துள்ளது. புதுப்பேட்டை 2 தற்போது கதை முழுமையாக முடிவடைந்து இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படலாம் என்றும், இந்த வருடம் கூட படம் எடுத்து வெளியிடலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதைத் தாண்டி ஆயிரத்தில் ஒருவன் கதைக்கான குழு பேச்சு வார்த்தை அதாவது டிஸ்கஷன் சென்று கொண்டிருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதில் செல்வராகவன், கார்த்தி, தனுஷ் மற்றும் பட குழுவினர்கள் அனைவரும் இணைந்து இப்படத்திற்கான ப்ரீ-ரோடுக்ஷன் மற்றும் நடிகர்களை பற்றியும் கதையின் ஓட்டத்தை பற்றியும் பேசி வருகிறார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் தனுஷ் மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து நடிக்கலாம் அல்லது, இருவரில் ஒருவர் நடிக்கலாம் என்றும், அவர் தரப்பில் பேசி பேசி வருகிறார்களாம். வொண்டர் பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இப்படத்தை பிரபல சினிப் போட்டோகிராஃபர் ராம்ஜி அவர்கள் கேமராமேனாக வேலை செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் டிஸ்கஷன் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறதாம், இன்னும் சில நாட்களில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செல்வராகவன் அவர்களை அறிவிப்பார் என்று தற்போது தகவல் கசிந்துள்ளது.

author avatar
Ranjith Kumar