அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல் காந்தியின் பேச்சை கே.எஸ். அழகிரி மற்றும் தங்கபாலு ஆகியோர் மொழிபெயர்த்தபோது ஏற்பட்ட குளறுபடிகள் மீம்ஸ் மெட்டீரியலாக மாறியது நமக்குத் தெரியும். அந்த வரிசையில் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் இணைந்துள்ளார். ராகுல் காந்தி ஆக்ரோஷமாக ஆங்கிலத்தில் பேசிய கருத்துகளுக்கும், செல்வப்பெருந்தகை தமிழில் மொழிபெயர்த்ததற்கும் துளியும் சம்பந்தமில்லாமல் போனதுதான் சமூக வலைதளங்களில் தற்போதைய ஹாட் டாபிக். “அந்தப் பேப்பர்ல பச்சைக்கிளிங்கிற வார்த்தையே இல்லையேடா, அப்புறம் எப்படி நீ அத வாசிச்ச?” என்கிற வடிவேலுவின் காமெடி பாணியில் நெட்டிசன்கள் இதனை வறுத்து எடுத்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடியின் முகத்தைப் பார்த்தால் அவர் “நம்பிக்கையை இழந்துவிட்டது போலத் தெரிகிறது” (Lost his confidence) என்று குறிப்பிட்டார். ஆனால் அதனை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகையோ, மோடி “முழுமையாக நம்பிக்கையோடு இருந்தார்” என்று அப்படியே தலைகீழாகக் கூறி அதிர வைத்தார். ராகுல் காந்தி எதைச் சொல்கிறாரோ அதற்கு நேர்மாறான கருத்தை செல்வப்பெருந்தகை மேடையில் முழங்கியது, அங்கிருந்தவர்களையும் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் ஒரு நிமிடம் குழப்பத்தில் ஆழ்த்தியது. ராகுல் காந்தி ஆங்கிலத்தில் விளாசிக்கொண்டிருக்க, செல்வப்பெருந்தகையோ தனக்குத் தோன்றியதை மொழிபெயர்ப்பாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
குறிப்பாக, சர்வதேச அரசியல் மற்றும் டொனால்ட் டிரம்ப் குறித்து ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்கள் மொழிபெயர்ப்பில் அடியோடு சிதைக்கப்பட்டன. எப்ஸ்டின் ஃபைல்ஸ், டேட்டா பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நிலை குறித்து ராகுல் விரிவாகப் பேசியபோது, செல்வப்பெருந்தகை மிகச் சுருக்கமாகவும், தொடர்பற்ற முறையிலும் ஏதோ ஒரு கதையைக் கூறுவது போல மொழிபெயர்த்தார். “டிரம்ப் சொன்னால் மோடி குதிப்பார்” என்று ராகுல் காரசாரமாகச் சொன்னதை, மிகவும் பலவீனமான வரிகளால் நிரப்பினார் செல்வப்பெருந்தகை. ராகுலுக்குத் தமிழ் தெரியாது என்பதால் அவர் வழக்கம்போலப் பேசிக்கொண்டிருக்க, அவருக்குப் பின்னால் நடந்த இந்த ‘பச்சைக்கிளி’ காமெடி சமூக ஊடகங்களில் கடுமையான ட்ரோல்களுக்கு உள்ளாகி வருகிறது.
அமித்ஷா போன்ற தலைவர்கள் தமிழகம் வரும்போது, மொழிபெயர்ப்பாளர் தவறு செய்தால் உடனே மேடையிலேயே திருத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ராகுல் காந்திக்குத் தமிழ் புரியாதது அவருக்குப் பெரும் பலவீனமாகிப் போனது. “அன்பிற்குரிய ராகுல் ஜி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம், ஆனால் தயவுசெய்து ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரைத் தேடுங்கள்” என்று காங்கிரஸ் ஆதரவாளர்களே புலம்பும் நிலைக்கு இந்தச் சம்பவம் தள்ளியுள்ளது. மேடையில் இருந்த மற்ற தலைவர்களும் இந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் அமைதி காத்ததும், இந்த நகைச்சுவையான சூழலை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றுவிட்டது.
Dear Rahul ji,
We always love you so much, regardless of party or alliance.
You really need a proper translator, sir… 😭😭😭😭😭😭😭😭😭😭😭 pic.twitter.com/49qOZJesfr
— Monkey (@Animalofficiall) April 18, 2026
