சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, குன்னூர் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான கார் பார்க்கிங் திட்டம், வருவாயைப் பெருக்குவதற்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டு வரப்பட்டது என்று விளக்கமளித்தார்.
மேலும், திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் தற்போதைய அமைச்சர் பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார். நெருக்கடி காலத்திற்கே அஞ்சாத இயக்கம் திமுக என்றும், தங்களுக்கு மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இதுபோன்ற உருட்டல் மற்றும் மிரட்டல்களுக்கெல்லாம் திமுக பயந்து நிற்காது என்றும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்குமாறும் சவால் விடுத்தார். திமுகவை அடிக்க அடிக்க அது உயர்ந்து எழுகிற பந்தாகத்தான் இருக்குமே தவிர, ஒருபோதும் முடங்கிவிடாது என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தா
