பெற்றோர்கள் மகிழ்ச்சி… அரசு மருத்துவமனையில்.. குழந்தை பிறந்தால் 1 கிராம் தங்கம்… தவெக அரசின் ‘தாய்மாமன்’ திட்டம்… யாருக்கெல்லாம் கிடைக்கும்…? முழு விவரம் உள்ளே…!

By Swetha on ஆனி 23, 2026

Spread the love

தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வது, மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 2,500 வழங்குவது மற்றும் ஆண்டிற்கு ஆறு இலவச சிலிண்டர்கள் வழங்குவது போன்ற பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் இடம்பெற்றிருந்தன. கடந்த மாதம் 10 ஆம் தேதி தவெக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, இந்த மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளன.

இந்தத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்த ஒரு முக்கியத் திட்டம் தான் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” ஆகும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தவெக அரசு சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்குவதாகும். இத்திட்டம் எப்போது தொடங்கும் மற்றும் யாருக்கெல்லாம் இதன் பலன்கள் கிடைக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

   

அதன்படி, தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால், தவெக அரசு கொடுத்த முதல் கட்ட வாக்குறுதி நிறைவேறப் போவதை எண்ணி பொதுமக்கள் மற்றும் தாய்மார்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.