“நீ என்ன பாவம் செய்தாயோ சேகர்பாபு”… மேடையிலேயே பாய்ந்த கமெண்ட்… ஆ.ராசா நடத்திய அக்குவேறு ஆணிவேறு அரசியல்….!

Spread the love

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, அண்மையில் தமிழக அரசியல் களத்தில் நுழைந்துள்ள நடிகர் விஜயையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் மிகக் கடுமையாக சாடிப் பேசினார். மேடையில் இருந்த திராவிட இயக்கப் பேச்சாளர் அருள்மொழி மற்றும் தமிழக அமைச்சர் சேகர்பாபு ஆகியோரைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், தமிழக அரசியல் தரம் தாழ்ந்து போயிருப்பது குறித்து தனது ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “ஒரு புத்திசாலியிடமோ, அறிவாளியிடமோ, அரசியல் ஆளுமையிடமோ அல்லது பொதுவாழ்வில் உழைத்த ஒருவரிடமோ தோற்றால் கூடப் பரவாயில்லை, ஆனால் பேசாமலேயே ஒருவர் முதலமைச்சர் ஆகி இருக்கிறார்” என்று விஜயைக் மறைமுகமாகக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

திராவிட இயக்கத்தின் பங்களிப்பால் தன் குடும்பத்தில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார மாற்றங்களை ஆ.ராசா பெருமையுடன் சுட்டிக்காட்டினார். தீண்டாமை மற்றும் வறுமை காரணமாக இலங்கைக்கு ஓடிய தன் தாத்தா, அங்கு கூலி வேலை செய்த தன் தந்தை எனத் தொடங்கி, இன்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியால் தன் குடும்பத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உருவாகியுள்ளனர் என்றார். லண்டனில் படிக்கும் தனது மகளுக்கு ஜாதி என்றால் என்னவென்றே தெரியாத அளவிற்குத் திராவிட இயக்கம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதை குறிப்பிட்ட அவர், “இப்படிப்பட்ட புரட்சிகரமான மாற்றங்களைச் செய்த திராவிட இயக்கத்தை எதிர்த்து, ‘மாற்றம் மாற்றம்’ என்று முழங்கும் விஜய் வந்து என்ன கிழிக்கப் போகிறார்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும், செய்தியாளர்களைச் சந்திக்க அஞ்சும் விஜயின் அரசியல் அணுகுமுறையையும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடந்துகொள்ளும் விதத்தையும் ஆ.ராசா கடுமையாகச் சாடினார். “டெல்லிக்கு எந்த முதலமைச்சர் போனாலும் செய்தியாளர்களைச் சந்திப்பது மரபு. 2009-ல் ஈழப்போர் உச்சத்தில் இருந்த இக்கட்டான சூழலில் கூட, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலைஞர் செய்தியாளர்களைச் சந்தித்து, ‘போராளிக்குச் சாவும் இல்லை’ என்று வரலாற்றுச் சிறப்புமிக்க பதிலை அளித்தார். ஆனால் இன்று மைக்கை நீட்டினால் ஓடுகிற ஒருவரைப் பார்க்கிறோம். சட்டமன்றத்திற்குப் போனால் அமைதியாகப் புத்தகத்தை வைத்துக்கொண்டு பவ்யமாகப் பார்க்கிறார்கள், வெளியே வந்தால் கைகால்களைத் தூக்கிக் காட்டுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது அமைச்சர் சேகர்பாபு நீ ஏதோ பாவம் செய்துதான் இந்தச் சட்டமன்றத்தில் போய் உட்கார்ந்திருக்கிறாய் என்று தோன்றுகிறது” என ஆதங்கப்பட்டார்.

விஜயின் உடைக் கலாச்சாரம் மற்றும் கொள்கையற்ற அரசியலையும் ஆ.ராசா கடுமையாக விமர்சித்தார். “காந்தி எளிமைக்காகக் கோவணம் கட்டினார், காலம் காலமாக ஆடையில்லாமல் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அம்பேத்கர் படித்து முன்னேறி கோட்டு போட்டார். தலைமுறை தலைமுறையாகக் கோவணம் கட்டியிருந்த சமூகத்தில் இருந்து வந்த ஒருத்தன் படித்துவிட்டு கோட்டுப் போட்டால் அதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், சினிமாவிலும் கோட்டுப் போட்டுக் கொண்டு நடிக்கும் விஜய், இங்கும் வந்து ‘நான் கோட்டுப் போட்டால் தப்பா?’ என்று அரசியல் மேடையிலும் நடிக்கிறார். உன்னை யார் தடுத்தது?” என்று கேள்வி எழுப்பிய அவர், நெற்றிக்கு ஒரு மதம், வாய்க்கு ஒரு மதம் என்று கூறி மழுப்பும் விஜயின் கொள்கையற்ற அரசியலை அயோக்கியத்தனம் என்றும் சாடினார்.

இறுதியாக, கடந்த தேர்தலில் தவறான புரிதலால் வாக்கு செலுத்திய வாக்காளர்களையும், புதிய தலைமுறையினரையும் நோக்கி ஆ.ராசா வேண்டுகோள் விடுத்தார். “குழந்தை சொன்னதைக் கேட்டுத் தாத்தா ஓட்டுப் போட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இனி வருகிற குழந்தைகளாவது அப்படிச் செய்யாமல், தவறான புரிதல்களை மாற்றி, புதிய தலைமுறையைத் திருத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். கலைஞர் கருணாநிதியின் கொள்கைகள் என்றும் உயிரோடு இருக்கும் என்றும், முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் சிறந்த பங்களிப்போடு தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட ஆட்சியைத் தக்க வைக்க மக்கள் முன்வர வேண்டும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Nanthini

Recent Posts

ஐயோ ரத்தம்..! கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்…சென்ட்ரல் சிசிடிவியில் சிக்கிய கொலையாளிகள்… நடுங்க வைக்கும் பரபரப்பு வீடியோ…!!

சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கிப் பயணித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சிவப்பு நிறப் பெட்டியொன்றிலிருந்து ரத்தம் கசிவதையும், துர்நாற்றம் வீசுவதையும்…

15 minutes ago

அடச்சீ… சுதந்திர தின ஒத்திகையில் கொடூரம்… 2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… கொதித்தெழுந்த நெட்டிசென்கள்…!

கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சிகள் முடிந்து மாணவர்கள் வீடு…

23 minutes ago

ஒரே நிமிஷத்தில் ரூ.60 லட்சம் அபேஸ்.! நம்ப வைத்து ஏமாற்றிய நிலத் தரகர்கள்… ரியல் எஸ்டேட் அதிபருக்குக் காத்திருந்த ஷாக்…!!

கோவையில் போலி அதிகாரப் பத்திரம் மூலம் நிலத்தை விற்பதாகக் கூறி, ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்யப்பட்ட…

30 minutes ago

அட கொடுமையே… ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… சிறுவன் தப்பியோட்டம்… உடந்தையாக இருந்த பெற்றோர் அதிரடி கைது…!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளிச் சிறுமி திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில்…

32 minutes ago

அடச்சீ… அவனை சும்மாவே விட கூடாது… 10 ரூபாய் கொடுத்து… 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… 5 ஆண்டுகளுக்குப் பின்… கூண்டில் நின்ற காம கொடூரன்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் தஹானு அருகேயுள்ள ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று…

40 minutes ago