தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அண்மையில் விலகிய அண்ணாமலை, ‘ஆனந்தமாகவும், அன்போடும்’ ஒரு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இன்று தனது இன்ஸ்டாகிராம் நேரலையில் தொண்டர்களுடன் உரையாடிய அவர், www.wearetheleader.org என்ற இணையதளம் மூலம் தங்களது இயக்கத்தில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் மக்களுக்கு முறையான அரசியல் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், சரியான நேரத்தில் இது முழுமையான அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு வரும் பொதுத்தேர்தலில் தங்களது கட்சி நிச்சயம் போட்டியிடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த நேரலையின் போது, “உங்களுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையேயான உறவு இனி எப்படி இருக்கும்?” என்று நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை மிகவும் நிதானமாகவும் அதே சமயம் தீர்க்கமாகவும் பதிலளித்தார். “பிரதமர் மோடி அவர்கள் எப்போதுமே நம்முடைய பிரதமர் தான், அவருக்கான அந்த கௌரவம் என்றும் இருக்கும்” என்று குறிப்பிட்ட அவர், அதே வேளையில் தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் பாஜகவின் கொள்கைகளைத் தட்டிக்கேட்க தான் தயங்கப்போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். சமீபத்தில் மத்திய அரசு 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மும்மொழி கொள்கை ‘டைம் டேபிளில்’ மாற்றம் செய்தபோது, அதற்காக தான் துணிச்சலோடு குரல் கொடுத்ததை அவர் உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே இனி பாஜகவையும் தான் அணுகப் போவதாக அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “எப்படி திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளைப் பார்க்கிறோமோ, எப்படி அண்ணன் சீமான், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், பிரேமலதா விஜயகாந்த், வைகோ உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கட்சித் தலைவர்களையும் பார்க்கிறோமோ, அப்படித்தான் இனி பாஜகவையும் பார்ப்பேன்” என்று கூறினார். மேலும், அரசியல் ரீதியாக யாரிடமும் தமக்கு தனிப்பட்ட வன்மம் எதுவும் கிடையாது என்றும், அந்தந்த கட்சிகள் தங்களின் கொள்கைகளை முன்னிறுத்துவது போல், தங்கள் இயக்கம் தங்களுடைய சொந்தக் கொள்கைகளை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
எதிர்ப்பதற்காகவே அரசியல் செய்யும் பாணியை மாற்றி, ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க விரும்புவதாகக் கூறிய அண்ணாமலை, தாங்கள் யாருக்கும் போட்டியாகக் களம் இறங்கவில்லை என்றும், தங்களது தரத்தைப் பார்த்து மக்களே தங்களைத் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். அண்ணாமலையின் இந்த அடுத்தகட்ட நகர்வு, தமிழக நலன் சார்ந்த விவகாரங்களில் இனி அவர் பாஜகவை நேரடியாக எதிர்க்கத் தயாராகிவிட்டார் என்பதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வரும் காலங்களில் திமுக, அதிமுகவிற்கு இணையாக பாஜகவையும் அண்ணாமலை விமர்சிக்கத் தொடங்குவார் என்பதற்கான வலுவான சமிக்ஞையாகவே இந்த இன்ஸ்டாகிராம் நேரலை பேச்சு அமைந்துள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…