அந்த நடிகர் சொல்லித்தான்….. “பில்லா” படத்தில் அஜித் நடித்தாரா…? உண்மையை போட்டுடைத்த பிரபலம்…!!!

By Soundarya on ஐப்பசி 24, 2024

Spread the love

பொதுவாக சினிமாவில் பழைய சூப்பர் ஹிட் படங்களை அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல அந்தந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் ரீமேக் செய்து நடித்தனர். அப்படி தமிழில் ரீமேக் செய்து தல அஜித் நடித்த படம் தான் பில்லா. 1980 வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பில்லா படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணமூர்த்தி என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

#image_title

இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த படத்தை 2007 ஆம் வருடம் தல அஜித் பில்லா என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்து நடித்திருந்தார். இந்த படத்தில் நமீதா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நடித்திருந்தார்கள். இன்டர்நேஷனல் டான் கதாபாத்திரத்துக்கு அஜித் பொருத்தமாக இருந்தார். விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

   
   

#image_title

 

இந்த படமானது வசூலில் மாபெரும் வெற்றி கண்டது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் தான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய செய்யாறு பாலு பில்லா படம் குறித்து பேசி உள்ளார். அதாவது அஜித் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது ரஜினிகாந்த் அஜித் படம் ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?  என்று கேட்டுள்ளார்.

#image_title

அதற்கு எந்த படமும் சரியாக ஓடவில்லை. கஷ்டப்பட்டு தான் நடிக்கிறேன் என்று அஜித் கூறினாராம். அதற்கு ரஜினி பில்லாவை ரீமேக் பண்ணுங்க என்று கூறினாராம் இதனை வைத்து தான் அஜித் பில்லா படத்தை நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.