இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் அம்பானியை தெரியாமல் இருக்காது. ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனத்தின் தலைவர் தான் முகேஷ் அம்பானி. இந்தியாவில் டாப் தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவரது தந்தை திருபாய் அம்பானி பிரபல தொழிலதிபர் ஆவார். ரிலையன்ஸ் இன்டஸ்டிரியை நிறுவியவரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானியின் குடும்பம் மும்பையில் வசித்து வருகிறது. அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நீதா அம்பானி தனது கணவரின் தொழிலில் பலவற்றில் பார்ட்னராகவும் சிஇஓவாகவும் இருக்கிறார். இதே போல் இவரது மகன் மற்றும் மகள்களும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரியின் இயக்குனராக இருந்து வருகிறார் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி. இவர் ஆனந்த் பிரமோல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து உள்ளார். சமீபத்தில் கூட உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.

இதற்கிடையில் தற்போது ஒரு வீடியோ பரவி வருகிறது. அது என்னவென்றால் ஈஷா அம்பானி அணிந்திருக்கும் ஒரு துணியின் விலை என்ன தெரியுமா என்ற வீடியோ தான் அது. இந்த பதிவில் போடப்பட்டிருக்கும் ஈஷா அம்பானி புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் துணியின் விலையை கண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர் அணிந்திருக்கும் டாப்பின் விலை 4 லட்சம் மற்றும் அவர் அணிந்திருக்கும் ஸ்கர்டின் விலை ஐந்து லட்சம். சுமார் பத்து லட்சம் மதிப்பிலான ஆடையை தான் அவர் அணிந்திருக்கிறார். இந்த ஆடையில் அவர் அணிந்திருக்கும் மேல் டாப்பில் வரும் பட்டன்கள் தங்கத்தால் ஆனவை என்று கூறப்படுகிறது. இந்த மாதிரி ஒரு தொகையில் அவர் இப்படி ஒரு சாதாரண டிரஸ்ஸை கூட வாங்கி இருப்பார் என்று யாருமே யோசித்திருக்க மாட்டார்கள்.
