அமரன் படத்தில் முகுந்த் மனைவி கேரக்டரில் நடிக்க…. சாய் பல்லவி வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

By Soundarya on ஐப்பசி 24, 2024

Spread the love

தற்போது தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிக்கொண்டே வருகின்றார் என்று சொல்லலாம். இவர் மலையாளத்தில் அதிகம் ஆர்வம் காட்டினாலும் தமிழ் சினிமாவிலும் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்.  இவர்  பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

#image_title

இந்த படத்தின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.  தமிழில் சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மாரி 2, என் ஜி கே, கார்கி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் அமரன் படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.

   
   

#image_title

 

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் இந்த திரைப்படம். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.  இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதற்கான புரொமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

#image_title

படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கேரக்டரில் தான் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதாவது 3 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.