பசும்பொன்னில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முத்துராமலிங்க தேவருக்கு தங்கம், வெள்ளி கவசங்களை அணிவித்து, அவரை ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவராக சித்தரிக்கிறார்கள் என்று சீமான் வேதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானவராக வாழ்ந்தவர் தன தேவர் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தான் ஆட்சிக்கு வந்தால், தேவர் நினைவிடத்திலுள்ள தங்கம் மற்றும் வெள்ளி கவசங்களை எடுத்துவிட்டு, அறக்கட்டளை தொடங்கி, அதில் வரும் நிதியை கொண்டு நலத்திட்டங்களை வழங்குவேன் என்று கூறியுள்ளார்.
