அதிமுகவின் கோட்டை சரிந்தது… மொத்தமாக தட்டி தூக்கிய திமுக… இபிஎஸ்-க்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி…!

By Nanthini on ஐப்பசி 31, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. இதில் செந்தில் பாலாஜியின் பங்கு என்பது சற்று அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி என்பது அதிமுகவின் கோட்டையாக உள்ளது. 2011, 2016, 2021 என தொடர்ந்து இந்த தொகுதியில் இபிஎஸ் இன் வலது கையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வெற்றி பெற்று வருகிறார். இதனால் இந்த தொகுதியை கைப்பற்றும் பொறுப்பை செந்தில் பாலாஜி இடம் திமுக ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் வேலுமணியின் ஆதரவாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.