பீகாரில் பிரசாரத்தின் போது, தமிழ்நாட்டில் பீகார் மக்களை திமுக அச்சுறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இதை கண்டித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஒடிசா, பீகார் என எங்கு சென்றாலும், தமிழர்கள் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக பிரதமர் மோடி வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ளார்.
இந்தியர்கள் அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருப்பதையே மறந்து விட்டு பிரதமர் மோடி பேசுவதாக கூறிய முதலமைச்சர் , அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
