நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தெலுங்குத் திரையுலகில் என்.டி.ஆர் – திரிவிக்ரம் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தில் முருகப்பெருமான் வடநாட்டில் பிறந்தவர் என்ற தவறான கருத்துருவாக்கம் பரப்பப்படுவதாகக் கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழ்ப் பேரினத்தின் குறிஞ்சி நிலத் தலைவனும், முப்பாட்டனுமான முருகனின் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் அதற்குரிய கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என படக்குழுவினருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முருகன் தமிழர்களின் வாழ்வியலோடும், பண்பாடோடும் ஒன்றிணைந்த ஆதி இறைவன் என்றும், “தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்” என்றும் சீமான் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தொல்காப்பியம், திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் யாவும் சேயோன், செவ்வேள், முருகன் எனப் பல்வேறு செந்தமிழ்ப் பெயர்களால் முருகனைப் போற்றுகின்றன என்பதைப் பட்டியலிட்டுள்ளார். தமிழர்களின் சிவன், முருகன், கண்ணன், திருமால் போன்ற தெய்வங்களை மாற்றினத்தவர் திருடி, அவர்களின் பெயர்களை மாற்றிப் புராணப் பாத்திரங்களாக மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், வணிக நோகத்திற்காகத் தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களை சிதைப்பதை இனி வேடிக்கை பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இத்திரைப்படம் இக்கருத்துருவாக்கத்துடன் வெளியானால், தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் இதனை வெளியிடக் கூடாது எனத் திரையரங்க உரிமையாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீறித் திரையிடப்பட்டால் நாம் தமிழர் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், தமிழ்ப் பண்பாட்டைப் புண்படுத்தும் இத்திரைப்படம் வெளியானால் கடும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதால், இதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்கக் கூடாது என முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்குச் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…
தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக்…
அவர் தனது ஸ்கூட்டர் வழியில் பழுதாகிவிட்டதால், அதைச் சரிசெய்வதற்காக அருகிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு நடந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார்.…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் யசோதரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பாலி (42). இவரது கணவர் கடந்த மூன்று…
வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆன்மீகத்தோடு சமூக விழிப்புணர்வையும் புகுத்தும்…
காசியாபாத் நகரில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷனில் அமைந்த விண்ட்சர் பாரடைஸ் 2 குடியிருப்பு லிஃப்டில், நாயை அழைத்துச் செல்வது…