Categories: சினிமா

அந்தப் படத்த எடுத்தா சிம்பு வச்சு தான் எடுப்பேன்..? விஜய்க்கு நோ சொன்ன இயக்குனர்.. இது புதுசால இருக்கு..!

Spread the love

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது வழக்கம் தான். இயக்குனர் கதை எழுதும் போதே இப்படத்தில் இந்த நடிகர் நடித்தால் சரியாக இருக்கும் என்று எண்ணி எழுதுவார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை, சம்பளப் பிரச்சனை என சூழ்நிலை காரணமாக அந்த நடிகர் நடிக்காமல் போக வாய்ப்புள்ளது.

வேறு வழியின்றி வேறு ஒரு நடிகரை அந்த இயக்குனர் தேடுவார். அப்படி ஏராளமான படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. சில படங்கள் பிளாப்பும் ஆகி இருக்கின்றது. நடிகர் மற்றும் அரசியல்வாதியான சீமான் பலக்காலம் முன்னரே பகலவன் என்ற ஒரு ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார். இது முழுக்க முழுக்க பொலிட்டிக்கல் திரில்லர் திரைப்படம் இது.

விஜய்க்காக தான் எழுதப்பட்டது என்று அவர் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. இது குறித்து அவர் பேசியிருந்த போதும் எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. எங்க இரண்டு பேருக்குமே இந்த படம் செட்டாகாது. அதனால் படம் எடுக்கவில்லை என்று கூறினார். மேலும் பகலவன் படத்தை எடுத்தால் நான் கண்டிப்பாக சிம்புவை வைத்தான் எடுப்பேன் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் விஜய் தற்போது அரசியலில் நுழைவது உறுதி ஆகிவிட்டது. இவரின் கடைசி படம் கண்டிப்பாக ஒரு அரசியல் படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு வேலை பகலவன் கதையில் கூட நடிக்க வாய்ப்பு இருக்கின்றதா? என்று சீமானிடம் மறுபடியும் கேட்கப்பட்டது. ஆனால் சீமான் இந்த படத்தை நான் எடுத்தால் கண்டிப்பாக அதை சிம்புவை வைத்து தான் எடுப்பேன் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

Mahalakshmi

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

3 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

3 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

3 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago