#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது. தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது.
இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்தது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, யோகிபாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
“கடைசி நேரத்தில் கட்ட பஞ்சாயத்து பண்றாங்க, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாவில் படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறாங்க” என விஷால் ஏகப்பட்ட குற்றச்சாட்டை முன் வைத்த நிலையில், ரத்னம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். படம் பார்த்த ரசிகர்கள் பலர் பாசிட்டிவ் விமர்சனங்களையும், ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரத்னம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் வெளிவந்த முதல் நாளில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். பொறுத்திருந்து பார்க்கலாம் ரத்னம் வசூல் வேட்டை நடத்துமா என்பதை.
பிலிப்பைன்ஸ் நாட்டின் படாங்கஸ் மாகாணத்தில் உள்ள பெர்ணாண்டோ விமான தளத்திலிருந்து, அந்நாட்டு விமானப்படையைச் சேர்ந்த இரண்டு எஸ்எஃப் 260 ரக…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் பதற்றமான சூழல், தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குப் பிறகும்…
சென்னை அம்பத்தூர் பாடி படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (41) மற்றும் இவரது மனைவி மாலதி (38) ஆகிய…
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்…
சமூக வலைதளங்களில் அவ்வப்போது வித்தியாசமான மற்றும் விசித்திரமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் ஒரு…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கடலோர கிராமமான திருமுல்லைவாசலில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்…