#image_title
தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை அந்த அளவுக்கு கில்லி ரீ ரீலிசை மக்கள் அனைவரும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. விஜயின் கேரியரில் மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது கில்லி.
இந்த திரைப்படத்தை இயக்குனர் தரணி இயக்கியிருந்தார். இப்பொழுது விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை எம். ரத்தினம் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தையும் மக்கள் ஒன்ஸ்மோர் கேட்டு ஆட்டம் போட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
இப்படத்தின் இயக்குனரான தரணியை சமீபத்தில் விஜய் சந்தித்திருந்தார். ஆனால் அதற்கு முன்னதாக மூன்று முறை விஜயை சந்திக்க முயற்சி செய்திருக்கின்றார். விஜய் அவரை சந்திக்காமல் தவிர்த்து இருக்கின்றார். காரணம் வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய் அரசியலில் இறங்க இருக்கின்றார். இதற்கிடையில் விஜய் கோட் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இதற்கு அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கின்றார்.
விஜயின் அரசியல் வருகைக்கு ஏற்றார் போல் தான் இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் தரணி தன்னிடம் கால்சீட் கேட்டு விடுவாரோ என்ற பயத்தில் தான் விஜய் அவரை சந்திக்காமல் இருந்திருக்கின்றார். மேலும் கில்லி படம் இப்போது ரீ ரிலீஸாகி சக்க போடு போட்டு வரும் நிலையில் இப்படத்தின் சுவாரசியமான நிகழ்வுகளை தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் மற்றும் தாரணி பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் மாலை மரியாதை உடன் விஜயை சென்று பார்த்து வந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
கேரள மாநிலம் காளிக்காவில் நிகழ்ந்த இந்த நெஞ்சை உறையவைக்கும் காட்சி, சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை ஆழமாக உணர்த்துகிறது.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது மற்றொரு சிறிய அளவிலான 'எபிக் ப்யூரி' ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என்று…
தமிழ் சினிமாவின் இயக்குநர் ஜேசன் சஞ்சய், பிரபல சொகுசு நகை நிறுவனமான 'சல்லானி ஜுவல்லரி மார்ட்' -ன் புதிய பிராண்ட்…
ஜெய்ப்பூரில் உள்ள பொதுப் பூங்காவில் நீண்ட நாட்களாக இளம் பெண்களைக் குறிவைத்து அத்துமீறி வந்த நபர் ஒருவர் கையும் களவுமாகப்…
டெல்லி ஷாதரா மாவட்டம் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள சர்வோதய கன்யா வித்யாலயா அரசுப் பள்ளியில், 12-ஆம் வகுப்பு பயின்று…
தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்களின் உள்கட்சிப் பிரச்சினையில், ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக மாவட்ட…