புரட்சித்தளபதியின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? இதோ முழு விவரம்…

By Begam on சித்திரை 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது.  தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது.

   

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்தது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, யோகிபாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

   

 

“கடைசி நேரத்தில் கட்ட பஞ்சாயத்து பண்றாங்க, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாவில் படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறாங்க” என விஷால் ஏகப்பட்ட குற்றச்சாட்டை முன் வைத்த நிலையில், ரத்னம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். படம் பார்த்த ரசிகர்கள் பலர் பாசிட்டிவ் விமர்சனங்களையும், ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரத்னம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் வெளிவந்த முதல் நாளில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். பொறுத்திருந்து பார்க்கலாம் ரத்னம் வசூல் வேட்டை நடத்துமா என்பதை.