2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராகச் சமூகச் செயற்பாட்டாளர் திருநங்கை ச. ரோசினி அவர்களை நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரோஷினி அறக்கட்டளையின் நிறுவனரான இவர், திருநங்கைகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அரசியலில் திருநங்கைகளுக்கான அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் பிரம்மாண்டமான “மக்களின் மாநாடு” நிகழ்ச்சியை நாளை நடத்த நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் அனைத்து வேட்பாளர்களும் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். சமூக சமத்துவம் மற்றும் பாலின நீதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 50% பெண் வேட்பாளர்களைக் களம் இறக்கும் நாதக-வின் இந்த வியூகம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…
பிரபல கல்வி பயிற்சியாளரான கான் சார் (Khan Sir) மற்றும் அவரது பயிற்சி மையம் குறித்த உண்மைகளை மாணவி ஒருவர்…
இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…
திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யான் பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நபர்கள் கும்பலால் இளம்…