என்னளவுக்குத் தோற்ற மகன் சரித்திரத்திலேயே கிடையாது… 5-வது முறையாக தனித்தே போட்டி… சீமான் திட்டவட்டம்..!!

By Soundarya on ஐப்பசி 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக , நாதக, தவெக என இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இதற்கிடையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் 5 ஆவது முறையாகவும் தனித்தே போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ” உலகளவில் என்னளவுக்குத் தோற்ற மகன் சரித்திரத்திலேயே கிடையாது” என்று கூறியுள்ளார்.