“டேய் யாருடா நீ?, திமுக நிர்வாகியை தாக்கிய சீமான்”… விருதாச்சலத்தில் பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on மார்கழி 15, 2025

Spread the love

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் திமுக நிர்வாகி ரங்கன் என்பவரை சீமான் தாக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சீமானுடன் சேர்ந்த நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகளும் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பாக 20 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு மாநில மாநாடு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய நிலையில் மாநாடு முடிந்து காரில் ஏறி சீமான் வெளியே சென்ற போது வழியில் நின்று கொண்டிருந்த கடலூர் கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகி காரை வழிமறித்து சீமானை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் சீமானின் ஆதரவாளர்கள் திமுக நிர்வாகியை சரமாரியாக தாக்கினார். சீமானும் காரில் இருந்து இறங்கி வந்து அவரை தாக்கியுள்ளார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் திமுக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.