தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் விட்டதை பிடிக்க ஈபிஎஸ் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் பலரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று குரல் எழுப்பி வருவதால் அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் இ.பி.எஸ் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் நினைக்க இபிஎஸ் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அமமுகவினர் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். அதேபோல திமுக சாத்தூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் தனுஷ்கோடி, மதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் N. கிருஷ்ணசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
