“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” “பூங்காற்று திரும்புமா பாட்டு கேட்ட காரோட்டிக்கு ஷாக்… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய ஸ்கூட்டி பெண்… பகீர் சம்பவம்…!!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2026

Spread the love

திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் ‘முதல் மரியாதை’ படத்தின் “பூங்காற்று திரும்புமா…” பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது, முன்னால் ஸ்கூட்டியில் சென்ற ஒரு பெண், எவ்வித இண்டிகேட்டரும் போடாமலும், பின்னால் வரும் வாகனத்தைக் கவனிக்காமலும் திடீரெனச் சாலையின் இடதுபுறத்தில் இருந்து குறுக்கே திரும்பியுள்ளார்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் காரை ஓட்டியவர் அதிர்ச்சியடைந்த போதிலும், உடனடியாகச் சாதுரியமாகச் செயல்பட்டு காரின் வேகத்தைக் குறைத்து எதிர்ச்சாலையில் திருப்பிப் பெரும் விபத்தைத் தடுத்துள்ளார். நல்லவேளையாக எதிர் திசையில் எந்த வாகனமும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, கார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

   

சாலைகளில் வாகனங்களை ஓட்டுபவர்கள் இதுபோன்ற அடிப்படை விதிமுறைகளைக் கூட மதிக்காமல் பொறுப்பற்ற முறையில் செல்வது தொடர்கதையாகி வருகிறது. லாரி மற்றும் கார் ஓட்டுநர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் இதுபோன்ற நபர்களுக்கு மீண்டும் ஓட்டுநர் தேர்வு வைத்து, விதிமீறலில் ஈடுபடுபவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.