தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவில் இருந்து விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி முதல் மாவட்டமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இன்னும் சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது
