தமிழக அரசின் அடிப்படையான மற்றும் மாறாத கொள்கை இரு மொழிக் கொள்கைதான் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அறிவிப்பின்படி, 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதியும், 4 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியாகின்றன . மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளைப் பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாகவும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு வரும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதால், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தற்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அமெரிக்காவில் அரங்கேறிய முறையற்ற உறவு விவகாரத்தில், ஸ்டீவன் பிளாட்ல் (Steven Pladl) என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டில் தனது…
போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த ராஜகோபால், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு…
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வழக்கம்போல ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்,…
விளாத்திக்குளத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம்…
சென்னை மணலி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும்…