சென்னை பெரம்பூரில் நேற்று லாரி ஏரி பள்ளி சிறுமி ஒருவர் உயிரிழந்ததையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது சென்னையில் விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகனங்களை குறைந்தது 100 நாட்கள் வரை திருப்பி ஒப்படைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
