சென்னையில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 11.9% மோட்டார் வாகனங்கள், தோல் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. மேலும் ஜவுளி, இயந்திரங்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டின் தொழில் முனைவோர்களில் பெண்களின் பங்கு 30 சதவீதம் உள்ளது என்று கூறியுள்ளார்.
