விற்பனை சான்றிதழ்களுக்கு பதிவு கட்டணம் குறைப்பு…. தமிழக அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு…!!

By Soundarya on ஆனி 19, 2025

Spread the love

தமிழக அரசனது விற்பனை சான்றிதழ்களுக்கு பதிவு கட்டணத்தை நான்கு சதவீதத்தில் இருந்து இரண்டு சதவீதமாக குறைத்துள்ளது. தமிழகத்தில் நேரடியாக உரிமையாளர்களிடம் இருந்து சொத்துக்களை வாங்கும் பொழுது அதற்கு விற்பனைக்கான கிரையை பத்திரம் பதிவு செய்யப்படுவது வழக்கம். இதற்கு சொத்தின் மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரை தீர்வையும், 2% பதிவு கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வங்கி உத்தரவு கடன் வசூல் தீர்ப்பாயம் ஏலம் மூலமாக கைமாறும் சொத்துகளுக்கு விற்பனை சான்றிதழ் மட்டுமே கொடுக்கப்படும். இந்த சான்றிதழை சர்பாதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போது இதற்கான கட்டணம் தான் நான்கு சதவீதத்தில் இருந்து இரண்டு சதவீதமாக குறைந்துள்ளது. இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விற்பனை சான்றிதழ் பதிவு செய்யும் பொழுது அதற்கு பதிவு கட்டணம் நான்கு சதவீதம் வசூலிக்கப்பட்டது. அதை இரண்டு சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து விற்பனை சான்றுக்கான பதிவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.