டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், முறைசாரா தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் மற்றும் திட்ட தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச மாத ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பல்வேறு திட்டங்கள் மற்றும் காரணங்களுக்காக அவுட்சோர்சிங், குறிப்பிட்ட கால வேலை பயிற்சியாளர் போன்ற எந்த வடிவத்திலும் வேலைகளை கேசுவல்மயமாக்க கூடாது. புதிய ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
போனஸ் பெறுவதற்கான ஊதிய வரம்பு, கணக்கிடுவதற்கான ஊதிய வரம்பு ,அதிகபட்ச போனஸ் சதவீதம் என அனைத்து வரம்புகளையுமே அகற்ற வேண்டும். கருணை தொகையை அதிகரிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் அரசு துறைகளில் தனியார் மயம் ஆகுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை ஒன்பதாம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் ஜூலை 9ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது.
