கொடுமையிலும் கொடுமை… கையில் கனவு சான்றிதழோடு பைக்கில் சென்ற 2 இளைஞர்கள்… எதிரே வந்த எமன்… குமரியில் நடந்த சோகம்…!

By Nanthini on தை 7, 2026

Spread the love

குமரி மாவட்டத்தை சேர்ந்த அஜீஸ் மற்றும் அர்ஷகத் அலி ஆகிய இரண்டு இளைஞர்களும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து விட்டன. இதரிடையே நேற்று அவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று சான்றிதழை வாங்கிவிட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வெள்ளமோடி பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற வாகனம் இது எதிர்பாராத விதமாக பள்ளி பேருந்து ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

நொடி பொழுதில் நடந்த இந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலே இரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். படிப்பை முடித்துவிட்டு சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.