தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜனவரி 5, 2026 அன்று ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். சென்னை வர்த்தக மையத்தில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் மடிக்கணினி பெற்ற மாணவர்கள் சிலர் அதில் நடிகர் விஜய்யின் புகைப்படத்தை வால்பேப்பர் அல்லது ஸ்டிக்கராக வைத்திருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
என்ன பசங்க இப்டி இறங்கிட்டாங்க…😄🔥
ஆனா இதுல கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் front la 2 போட்டோ கூட ok but mouse pad பக்கத்துலயும் போட்டோ 🙄 pic.twitter.com/udv1tJdYBR
— Monkey (@Animalofficiall) January 6, 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் ஆதரவாளர்களான மாணவர்கள், அரசு வழங்கிய மடிக்கணினியில் தங்களின் விருப்பத்திற்குரிய தலைவரின் புகைப்படத்தை வைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்தச் சம்பவம், குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், திமுக அரசு வழங்கிய மடிக்கணினியில் எதிர்க்கட்சித் தலைவரின் புகைப்படம் இடம்பெற்றது இணையவாசிகள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
