“கழிப்பறையில் ரத்தக்கறை” மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை… பள்ளி முதல்வர் உட்பட 8 பேர் கைது..!!

By Soundarya on ஆடி 11, 2025

Spread the love

தானே மாவட்டம் சகாப்பூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது.இங்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று பள்ளி வளாக கழிப்பறையில் ரத்தக்கரை படிந்திருந்ததாக கூறப்படுகிறது . இதை கண்டுபிடிப்பதற்காக மாதவிடாய் இருப்பதாக கூறிய மாணவிகளின் இடது கை ரேகையை பதிவு செய்துள்ளார்கள். அதே நேரத்தில் மாதவிடாய் இல்லை என்று கூறிய மாணவிகளை கழிவறைக்கு அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தியுள்ளார்கள். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் வீடு திரும்பியதும் பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார்கள். இதனையடுத்து இந்த கொடூர சம்பவத்தை கேட்டு கொந்தளித்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளியின் முதல்வர் , ஆசிரியர் நான்கு பேர் உட்பட எட்டு பேர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பள்ளி முதல்வரின் உத்தரவின் பெயர்தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.